நீங்க பேசாததை விடவா அவரு பேசிட்டாரு…? பேச்சு பேச்சாகத்தான் இருக்கனும் ;சவுக்கு சங்கருக்கு பாஜக ஆதரவு!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 1:09 pm
Quick Share

சவுக்கு சங்கர் பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்கு முறை முறையற்றது என்பதும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக தடுக்கிறது என்பதே உண்மை என தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அவதூறு பரப்புவதோடு, சில பத்திரிகைகள் தனிப்பட்ட முறையில் பாஜக நிர்வாகிகள் குறித்து விமர்சனம் செய்வதும் கூட தொடர் கதையாகி வருகிற நிலையில், சில வருடங்களுக்கு முன் ‘குளியறைக்குள் எட்டிப்பார்த்த ஆளுநர்’ என்ற தரம் கெட்ட பொய் செய்தியை இன்றைய ஆளும் கட்சியின் ஆதரவு தொலைக்காட்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: போலீசாருக்கே ஆப்பு வைத்த போலீஸ்… ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் ; சென்னையில் போலீசார் அதிரடி!!

மேலும் சில பத்திரிகைகள் தரக்குறைவின் எல்லைக்கே சென்று விடுவதும் கூட சர்வசாதாரணமாகி விட்ட நிலையில், திமுக அரசு மீதும் அதன் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து சவுக்கு சங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அறிந்ததே. அந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லாது இருந்தால் அந்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு மறுக்க வேண்டும் அல்லது சவுக்கு சங்கர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடுக்க வேண்டும்.

அதை விடுத்து சவுக்கு சங்கரின் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மீது அற்ப காரணங்களுக்காக வழக்கு தொடுப்பதும், நடவடிக்கை எடுப்பதும் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என்பதை தொடர்புடையவர்கள் உணர்வார்களாக! தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள் இதை விவகாரத்தில் தலையிட்டு தொடர்புடையவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இல்லையேல், நேற்று நான், இன்று நீ, நாளை யாரோ என்ற நிலை உருவாகும்.

பல்வேறு சமயங்களில் தனிப்பட்ட முறையில் சவுக்கு சங்கர் அவர்கள் பாஜக தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்த போது, நாம் அதை கண்டித்தோம், சில சமயங்களில் சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டது. பல விவகாரங்களில் சவுக்கு சங்கரின் கருத்துகள் நமக்கு ஏற்புடையதும் அல்ல என்றாலும், தற்போது சவுக்கு சங்கர் பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்கு முறை முறையற்றது என்பதும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக தடுக்கிறது என்பதே உண்மை, என கூறியுள்ளார்.

  • Senthil Balajiகிளைமாக்ஸ்க்கு நெருங்குகிறதா செந்தில் பாலாஜி வழக்கு? நாள் குறிச்சாச்சு… நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்..!!
  • Views: - 223

    0

    0