கடந்த 3 மாதங்களாக பாஜக அணிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கிறது : ரெய்டு குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 1:57 pm

கடந்த 3 மாதங்களாக பாஜக அணிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கிறது : ரெய்டு குறித்து அமைச்ச் உதயநிதி பேச்சு!!

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று , நீட் தேர்வுக்கு எதிராக 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து வாங்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் பொருட்டு காங்கிரஸ் தலைவர்களிடம் கையெழுத்து வாங்குவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்று இருந்தார்.

காங்கிரஸ் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை அனிதா முதல் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

50 நாளில் 50 லட்சம் கையெழுத்து வாங்கி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரையும் சந்தித்து நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்குவேன் எனவும் அமைச்சர் உதயநிதி கூறினார்.

இன்று அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவது குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகையில், திமுகவில் மாணவரணி , இளைஞரணி, மருதுவரணி இருக்கிறது. காங்கிரசில் அதுபோல பல்வேறு அணிகள் உள்ளன. அதுபோல, பாஜகவிலும் அணிகள் இருக்கிறது.

பாஜகவில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என அணிகள் உள்ளன. அவர்கள் அவர்களுக்கான வேலைகளை செய்கிறார்கள். வருமானவரி சோதனைகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்.
கடந்த 2,3 மாதங்களாகவே நான் பார்த்து வருகிறேன். அதிகமாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள், அவர் தொடர்புடைய இடங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் அலுவலங்கள் என சென்னை, திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதலே சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!