இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பாஜக முயற்சி : Speaking for INDIA என்ற பெயரில் முதலமைச்சர் வெளியிட்ட ஆடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 9:52 am

சமீபத்தில், ‘SpeakingforIndia’ என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆடியோ பரப்புரையை தொடங்கினார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். அதாவது, (PODCAST) ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், Speaking for INDIA என்ற தலைப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் முதல் ஆடியோ தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் இன்று வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது ‘Speaking 4 India Podcast’ மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடும் வீடியோ வெளியகியுள்ளது.

அதில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம். காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது.

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது.

குஜராத் மாடல் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல், இப்போது என்ன மாடல் என தெரியாமலேயே முடியப் போகிறது. வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!