அவதூறு பேச்சு; யூடியூப் மோதல்; வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சிக்கிய பிரியாணி மேன்,..

Author: Sudha
30 July 2024, 10:15 am

கடந்த சில நாட்களாக இணையத்தில் பெரிய பிரச்சனையாக மாறி இருப்பது பிரியாணி மேன் – இர்பான் – டெய்லர் அக்கா சண்டை. பிரியாணி மேனின் உண்மையான பெயர் ரபி. இவர் பிரியாணி மேன் என்ற சேனலை நடத்தி வருகிறார்.வாயை திறந்தாலே வன்மம், கோபம்,வார்த்தைகள் என இவரின் ஸ்டைல் வித்தியாசமானது.

பிரியாணி மேன் மீது ஏற்கனவே ஒரு பீடோ புகார் உள்ளது. அதாவது சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த டெலிகிராம் குழுவின் அட்மின் ஒருவருடன் இவர் நட்பாக இருந்ததும்.. அதன்பின் விஷயம் பெரிதான போது இதில் இருந்து பிரியாணி மேன் எஸ்கேப் ஆனதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதில் நேரடியாக பிரியாணி மேன் மீது புகார் வைக்க பெரிதாக ஆதாரங்கள் முன் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் யூடியூபர் இர்பானை பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் பிரியாணி மேன்.அதில் இர்பானின் மச்சான் ஏற்படுத்திய கார் விபத்து பற்றிய விமர்சனங்களை முன் வைத்தார். அது இர்பான் செய்தது என்றும், விபத்து ஏற்படுத்திவிட்டு இர்பான் நிற்கவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அதோடு இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தை பற்றியும் விமர்சனங்களை முன் வைத்தார்.

இர்பான் மீது வைக்கப்பட்ட புகார்களுக்கு ஆதாரங்களுடன் இர்பான் பதிலடி கொடுத்தார். இந்த விஷயம் முடிவதற்குள் இணையத்தில் பிரபலமாக இருக்கும் டெய்லர் அக்கா, ப்ளவுஸ் வீடியோ என்று ஆபாசமாக வீடியோ போடுவதாக புகார் சொன்னார். அதோடு நிற்காமல்.. டெய்லர் அக்காவை கடுமையாகத் தாக்கி பேசினார். அவர் மோசடி செய்வதாகவும் புகார்களை அடுக்கினார்.

பிரியாணி மேன் வீடியோக்கள் தொடர்பாக திமுக ஐடி விங்கின் அதிகாரபூர்வ புகார் தளமான ஐடி விங் ரிப்போர்ட் பக்கம் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. அவர் மீது புகார் தர வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் அடுத்து அவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதாக வாய்ப்பு உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!