நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கு.. ஆனா திமுகவுக்கு இது தேவையா? நீதிமன்றத்தில் வழக்கு… ஜெயக்குமார் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 6:54 pm

காஞ்சீபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “தி.மு.க. ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் தி.மு.க.வினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு வந்துவிட வேண்டும்.

முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது” என்றார்.

இந்நிலையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருத்துக்கு பதிலடி கொடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை.

மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்வது எந்த விதத்தில் நியாயம்? உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நா கூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளார்.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. பார்முலா4 கார் பந்தயத்தை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!