நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு.. சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு : 2 வருடம் ஜெயில்.. தேர்தல் ஆணையம் STRICT!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 2:02 pm

நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு.. சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு : 2 வருடம் ஜெயில்.. தேர்தல் ஆணையம் STRICT!!

7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாளையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. அதன்படி நாளை மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. அதாவது, ஊடகங்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் வலைதளம் போன்ற சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

அதேபோல் நாளை மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஹோட்டல்கள், வீடுகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்யவேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது.

மேலும் படிக்க: ”அக்கா 1825” என்ற பெயரில் தமிழிசை தேர்தல் வாக்குறுதி : தென்சென்னை தொகுதிக்கான அறிக்கை வெளியீடு!

இசை மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!