காங்கிரஸ் பொதுக்கூட்டம் ரத்து… ராகுல் காந்தி எடுத்த முடிவு : காத்திருக்கும் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2023, 12:58 pm

கடந்த 2019- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசாரம் செய்த போது , மோடி சமூகம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மேல்முறையீடு வழக்குதாக்கல் செய்ய ராகுல் காந்தி நாளை சூரத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!