எம்.பி. சீட் தரமுடியாது… முதலமைச்சர் கூறியதும் எதிர்க்கட்சிக்கு தாவிய ஆளுங்கட்சி எம்.பி : அரசியலில் ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2024, 9:59 pm

எம்பி சீட் தரமுடியாது… முதலமைச்சர் கூறியதும் எதிர்க்கட்சிக்கு தாவிய ஆளுங்கட்சி எம்.பி : அரசியலில் ட்விஸ்ட்!

ஆந்திராவில் ஆளும் ஓய்.எஸ்.ஆர்., காங்., கட்சி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ராஜ்யசபா எம்.பி.,யாக 2018-ம் ஆண்டு தேர்வு பெற்ற வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி என்பவர் வரும் லோக்சபா தேர்தலில் நெல்லூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் இவருக்கு சீட் வழங்க ஜெகன் மோகன் ரெட்டி மறுத்தார்.

இதையடுத்து தனது ராஜ்யசபா எம்.பி., பதவி காலம் நிறைவடைய ஒரு ஆண்டு உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தெலுங்கு சேதம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுமுன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அக்கட்சி சார்பில் நெல்லூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெமி ரெட்டி பிரபாகர் ரெட்டி தெரிவித்தார். ஏற்கனவே ஜெகன்மோகன் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கட்சி தாவி வரும் நிலையில் இன்று ஒரு எம்.பி., கட்சி தாவியது குறிப்பிடத்தக்கது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!