16 மணிநேரம் வேலை செய்யனும்… ஓய்வெடுக்க நேரமில்லை எனக் கூறினார் ஜெயலிலிதா : விசாரணை ஆணையத்திடம் மருத்துவர்கள் வாக்குமூலம்..!!

Author: Babu Lakshmanan
7 March 2022, 2:39 pm
Quick Share

சென்னை : உடல்நிலை சரியில்லாத போது, 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணை ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார்.

இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு கேள்விகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் வாக்குமூலத்தை பெற்றது.

இதன் ஒருபகுதியாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக மருத்துவக் குழு வல்லுநர்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த பரிந்துரையின் பேரில், 6 பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, விசாரணை ஆணையத்திடம் டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்தார்.

அவர் கூறியதாவது :- சென்னையில் இருக்க வேண்டாம், சில நாட்கள் சிறுதாவூர் அல்லது ஊட்டிக்கு சென்று ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
மருத்துவர்கள் பரிந்துரைத்தும் தினமும் 16 மணிநேரம் வேலை இருப்பதாகக் கூறி ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார்.

Chennai Apollo - Updatenews360

2016ல் ஜெயலலிதா தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். ஓய்வெடுக்க மறுத்ததால் ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது, எனக் கூறினார்.

Views: - 567

0

0