அப்படியெல்லாம் ஏதுமில்லைங்க… தேவர் பூஜையும்.. பிரதமர் மோடியின் வருகையும்… அண்ணாமலை கொடுத்த விளக்கம்

Author: Babu Lakshmanan
13 October 2022, 10:33 am
Court Appreciate Annamalai - Updatenews360
Quick Share

சென்னை : தேவர் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பாரா..? மாட்டாரா..? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு சென்றிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஇன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது தான் இந்தி கட்டாயம். 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை. இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால், தமிழக பாஜக எதிர்க்கும்.

யார் இந்து என்று கண்டுபிடிப்பது தான் தற்போது டிரெண்டாகி விட்டது. காங்கிரஸ் இந்தி மொழியை திணித்த போது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தது. மத்திய அரசு 3 மொழியை படிக்க வேண்டும் வேண்டும் என சொல்லி வருகின்றது. இந்தி கற்பதில் தமிழகம் “சி” நிலையில் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினை தூங்கவிடுங்க என திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்.

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க வரும் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பசும்பொன் வருகிறார் என தவறான தகவல் பரவி வருகிறது. அது போல் அவர் பசும்பொன்னிற்கு வரவில்லை. எங்கிருந்து இப்படி ஒரு தகவல் பரவியதோ தெரியவில்லை. பிரதமர் வருவதாக இருந்தால் 2 மாதங்கள் முன்பே அது தீர்மானிக்கப்படும். திடீரென தீர்மானிக்க முடியாது. அடுத்த வருடம் தேவர் குரு பூஜைக்கு பிரதமருக்கு அழைப்பு விடுப்போம். மேலும், அனைத்து குரு பூஜைகளும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பது பாஜக விருப்பம், எனக் கூறினார்.

Views: - 418

0

0