அரசு நிலத்தை ஆக்கிரமித்து காலேஜ் கட்டியதாக வழக்கு… அமைச்சர் எவ வேலுவின் மனைவிக்கு எதிரான வழக்கு… ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
17 November 2023, 6:53 pm

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டியதாக அமைச்சர் எவ வேலு மனைவிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் எவ வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமித்து, பொறியியல் கல்லூரி கட்டியுள்ளது. ஆக்கிரமித்த நிலத்திற்கு பட்டா வாங்கி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுள்ளது.

அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதால் அரசு நிலத்தை வாங்கி அதில் கல்லூரி கட்டியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும். கல்லூரி கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமைச்சர் எவ வேலுவின் மனைவிக்குஉத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 379

    0

    0