“Zero is Good” போலீசார் வைத்த பதாகை: குழப்பத்தில் மக்கள்: என்னவா இருக்கும்…!?

Author: Sudha
5 August 2024, 9:39 am

சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள “ZERO IS GOOD” என்ற வாசகம் அமையப்பெற்ற பதாகைகளால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் பலருக்கும் இது என்னவாக இருக்கும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் அடிக்கடி சென்னை மாநகர பெருவீதிகளில் புதிர் வாசகங்கள் கொண்ட பதாகைகள் வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் “ZERO IS GOOD” என்னும் வாசகம் அமையப்பெற்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. புதிர் பதாகைக்கான பதிலை அறிந்து கொள்ளும் ஆர்வம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!