சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது… கலவரத்திற்கு காரணமான முதல்வர் மற்றவர்களை பலிகாடாக்கிறார் : ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 10:30 am

திருவள்ளூர் : திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்ட ஒழுங்கு பாழாய் போகும், கலவரத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றவர்கள் பலிகாடாக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் கடந்த 11 ஆம் தேதி அதிமுக தலைமை கழகம் தாக்குதலில்
கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக நிர்வாகிகள் 14 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், அதிமுக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து அவர்களை தோளில் தூக்கி பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசின் பொய் வழக்கால் 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மக்கள் மீது சுமையை திணிக்கிறார்கள். பம்பர் பரிசாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். மீண்டும் பேருந்து கட்டணத்தை ஏற்றுவார்கள்
என கூறினார்.

மேலும் சட்டம் ஒழுங்கு சரியில்லாத முதல்வர் வைத்திருக்கும் துறையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் மற்றவர்கள் பலிகாடாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மாணவி விவகாரத்தில் குழு மேல் குழு அமைத்து பயனில்லை சிபிஐ விசாரணை வேண்டும்.

தாயின் நியாயமான வேதனை உணர்வு மற்றும் கேள்விக்கு பதில் சொல்ல அரசுக்கு வக்கில்லை
திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்ட ஒழுங்கு பாழாய் போகும். கலவரத்திற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியது முதலமைச்சர் ஸ்டாலின்தான் என்றும், நிதி அமைச்சர் மக்கள் உணர்வை பிரதிபலிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். வருமானம் வந்தால் போதும் என்ற வகையில் இருந்தால் மக்கள் நலன் காக்கும் அரசாக இது அமையாது.

நிர்வாக திறமை இல்லாத நிதி அமைச்சரால் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொண்டு வரியை குறைக்க முடியவில்லை எனவும் விடியா அரசு இரட்டை வேஷம் போடுகிறது. கார்ப்பரேட்டில் இருந்து வந்தவர்
நிதி அமைச்சர் மக்கள் நலன் அவருக்கு தெரியாது.

ஜிஎஸ்டியில் என்ன கருத்தை இவர் வைத்தார் என கேள்வி எழுப்பிய அவர், அதிமுக
பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கணக்கு வழக்குகளை அவரே கையாள்வார் இதில்
எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

திமுக மக்களுக்கு சுமையை சுமத்துகிறது சொத்து வரி உயர்வு மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு செய்யவில்லை. மின் கட்டணத்தை ஏற்றி உள்ளார்கள் என்றும் வருகிற 25ஆம் தேதி மின்கட்டணம் சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மக்கள் முட்டாள்கள் இல்லை புத்திசாலிகள். விழித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாக திறமையின்மை, நிதி மேலாண்மை இல்லாததால் மக்கள் மீது திமுக அரசு சுமையை திணிக்கிறார்கள் என்று தெரிவித்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!