AM, PM பார்க்காத CM-ஆ இருக்க விரும்பல… MM CM-ஆ இருக்கத்தான் ஆசைப்படுறேன் ; மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!!

Author: Babu Lakshmanan
9 September 2022, 4:54 pm
Quick Share

AM, PM பார்க்காத CM என்ற போஸ்டர் அடித்திருந்தார்கள் என்றும், ஆனால் நான் MM CM ஆக இருக்க விரும்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகனின் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, கண்ணப்பன், பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.வ.வேலு, .கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மா.சுப்ரமணி, மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்ரபாணி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மனோ.தங்கராஜ், அன்பின்மகேஷ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது :- திருமணத்திற்கு வந்துள்ள அமைச்சர்கள், கூட்டணி கட்சிதலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துக்கள். மணமக்களை வாழ்த்தி கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை திருமண விழா அல்லாமல் மண்டல மாநாடு என குறிப்பிட்டதிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும்.

அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம் , அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரமாண்டமாக தான் செய்வார். தனி முத்திரை பதிப்பார், பி்ரமாண்டத்தை பதிப்பார். அதனால், மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும். கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்த திருமணத்தை நடத்தியுள்ளார்.

ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்பட கூடியவர் பி.மூர்த்தி. அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முடிவெடுத்தோம். அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் வழங்குவதை யோசித்து அச்சத்தோடு வணிகவரித்துறையை கொடுத்தோம். அச்சப்பட்டோம். ஆனால் பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாக செயல்படுகிறார். இப்போது நிதிச்சுமை உள்ளது.

தற்போது வணிக பதிவுத்துறை வரலாற்றில் 13 ஆயிரத்து 913 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பத்திர பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள்தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. சார் பதிவாளர் அலுலவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான வசதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து வந்து அலுவலகங்களில் உயர மேடை நீக்கியது, நமது திராவிட மாடல் ஆட்சியில்தான்.

போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்ட திருத்தம் செய்ய குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால், மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர். மூர்த்தி பெருசா… கீர்த்தி பெருசா… என கேள்வி எழுப்பினால், எனக்கு கீர்த்திலாம் தெரியாது. ஆனால், எனக்கு மூர்த்தி தான் பெரியதாக தெரிகிறார்.

மக்கள் நம்பை நம்பி அளித்த நமபிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பயன்பெறும் வகையில், எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல, நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு நம் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

நான் நிகழ்ச்சிக்கு செல்லும் போது இரு மருங்கிலும் பொதுமக்கள் உற்சாகமாக என்னை வரவேற்கின்றனர். மனுக்களை நம்பிக்கையோடு என்னிடம் தருகின்றனர். மனு அளித்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு தருகிறார்கள். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 100 நாட்களில் 75 சதவித மனுக்களுக்கு தீர்வு எட்டியுள்ளோம். நான் செல்லும் போது யார் மனு வைத்திருந்தாலும் வாங்கிருவேன். மாற்றுத்திறனாளிகள் என்றால் நானே நேரில் சென்று வாங்குவேன். சில நேரங்களில் உடல் நலத்தை பார்த்துகொள்ளுங்கள் என நமது அரசின் மீது நம்பிக்கையோடு பாசத்தோடு உள்ளனர்.

மதுரையில் மாபெரும் கலைஞர் நூலகம் 75 சதவீத பணி நிறைவு, ஜல்லிக்கட்டு மைதான பணி, கீழடி பண்பாட்டு அரங்கம், பெருநகராட்சி குழுமம், சுற்றுவட்ட சாலை, மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங், தமுக்க மாநாட்டு மையம், பாதாள சாக்கடை அமைப்பு பணி, ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அனைவரும் ஓயாமல் மக்கள் பணி ஆற்றி வருகிறோம்.

AM , PM பார்க்காத சிஎம் என MM CM ஆக இருக்க வேண்டும். மினிட் டூ மினிட் சிம் ஆக இருக்க ஆசை. அப்படி இருந்து CM நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என பாடுபடுகிறோம். திமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக கூறுகிறார். அவருடைய எம்.எல்ஏக்களே அவருடன் பேசுவதில்லை. திமுக எம்.எல்ஏக்கள் பேசுவதாக புருடா விடுகிறார். அம்மையார் மறைவிற்கு பின் அனைத்து தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளனர்.

அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போயுள்ளது. எடப்பாடியின் பதவி டெம்ப்ரவரி பதவி தான் பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம். அதனை பற்றி பேச நேரமில்லை . மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோம், எனக் கூறினார்.

Views: - 189

0

0