பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டும் நம் முயற்சிக்கு வழிகாட்டியாக திகழ்பவர் நல்லகண்ணு ; முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 5:57 pm

பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் எடுத்துள்ள முயற்சிக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக திகழ்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு உடன் இருந்தனர்.

பின்னர் மேடையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் ;- பொதுவுடைமை இயக்கத்தின் சிற்பி நல்ல கண்ணுவின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தகைசால் தமிழர் விருது சங்கராய்யா, நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கப்பட்டதன்மூலம் அந்த விருது பெருமை பெற்றுள்ளது.

தனது கொள்கை பயணத்தில் நழுவி விடமால் தொடர்ந்து பயணிக்கும் நல்லகண்ணு, கொள்கைக்கும், இலட்சியத்திற்கும் இலக்கணமாக தள்ளாத வயதிலும் செயல்படுபவர். அவரது அரும்பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என கேட்டுகொள்கிறேன். பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட நாம் எடுத்துள்ள முயற்ச்சிக்கு நல்லகண்ணு வழிகாட்டியாக திகழ்கிறார், என்றார்.

மேலும், திமுக அரசுக்கு பக்க பலமாக இருந்து வழிகாட்டும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும், என அன்பான வேண்டுகோள் வைப்பதாக கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?