கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டவருக்கு டார்ச்சர்… சமையலறையின் சுவர் மீது சிறுநீர் தெளிப்பு… கோவை மேயரின் குடும்பம் அடாவடி..!!!

Author: Babu Lakshmanan
25 August 2023, 9:13 pm

கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட பெண் வீட்டின் மீது குப்பையை கொட்டி, ‘டார்ச்சர்’ செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, மணியக்காரம்பாளையம் நட்சத்திரா கார்டனில் வசிப்பவர் சரண்யா, 33, இவரது கணவர் கோபிநாத், இரண்டு குழந்தைகள் உள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த இவர்கள், 10 ஆண்டுகளாக கோவையில் வசிக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளாக, தற்போதுள்ள வீட்டில் வாடகைக்கு வசிக்கின்றனர். நான்கு வீடுகளை உள்ளடக்கிய இந்த வீட்டில், முன்புற வீட்டில், கோபிநாத் குடும்பம் வசிக்கிறது. பின் வீட்டில், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் தாய் காளியம்மாள் மற்றும் மேயரின் தம்பி குமார் வசிக்கின்றனர்.

கல்பனா மேயராவதற்கு முன், காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்த போது, மருத்துவ செலவுக்காக, கோபிநாத்திடம் குமார் 15,000 ரூபாய் வாங்கினாராம். அதில் 5,000 ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்ததாகவும், 10,000 ரூபாயை கொடுப்பதற்கு முன், அவரது அக்கா கல்பனா, கோவை மேயராகி விட்டார். கொடுத்த பணத்தை குமாரிடம், கோபிநாத் கேட்ட போது, திட்டி அனுப்பியுள்ளாராம் குமார்.

பலமுறை கேட்டும் பணம் கிடைக்காத விரக்தியில், கோபிநாத் அதை கேட்காமலேயே விட்டு விட்டார். ஆனால், அதன் பின் பல விதங்களிலும் குமார், டார்ச்சர் செய்யத் துவங்கினார். எல்லாருக்கும் பொதுவான இரண்டு, ‘கேட்’களையும் பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளார். இதனால் ஒரு மாதத்துக்கும் மேலாக, கோபிநாத்தால் அவரது காரை எடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன், மேயர் கல்பனாவும் இங்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார்.

https://player.vimeo.com/video/857920499?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

அதன் பின், கோபிநாத் குடும்பத்தின் மீதான, ‘டார்ச்சர்’ அதிகரித்துள்ளது. கோபிநாத் வீட்டின் சமையலறை பின்புறத்தில் கெட்டுப்போன சாப்பாடு, வெட்டப்பட்ட கோழிக்கழிவு போன்றவற்றை கொட்டியுள்ளனர். வாளியில் சிறுநீரைப் பிடித்து, அதையும் கோபிநாத் வீட்டின் சமையலறைச் சுவற்றின் மீது குமார் கொட்டியுள்ளார். இவை அனைத்தையும் ‘சிசிடிவி’ பொருத்தி, கோபிநாத் குடும்பத்தினர் வீடியோ எடுத்துள்ளனர்.

இதுபற்றி தமிழக முதல்வர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் கோபிநாத் குடும்பத்தினர் புகாராக அனுப்பியுள்ளனர். கோவை திமுக மேயர் கல்பனாவின் சகோதரரின் இந்த செயல் அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?