‘இந்த மாதிரி பொய் சொல்ற முதலமைச்சரை பார்த்ததே இல்ல’… திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சால் அதிர்ந்து போன திமுகவினர்..!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 8:38 am

கோவை ; இந்த மாதிரி பொய் சொல்ற முதலமைச்சரை பார்த்ததில்லை என்று திமுக எம்பி ஆ.ராசா பேசியது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திமுக எம்பி ஆ.ராசா சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சேரன் நகர் பகுதியில் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர், அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசிய ஆ.ராசா, தமிழகத்திற்கு 37 ஆயிரம் நிவாரணம் நிதி கேட்டும் ஒரு பைசா கூட தராத மத்திய அரசும், பிரதமர் மோடியும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என பேசுவது வேடிக்கையாக உள்ளது, என்றார். தொடர்ந்து, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த அவர், திடீரென ‘இந்த மாதிரி பொய் சொல்லும் முதலமைச்சரை பார்த்ததில்லை,’ என கூறியது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் சுதாரித்துக் கொண்டு ஆ‌.ராசாவிடம் கூறினர்‌‌. உடனடியாக அவர் இப்படிபட்ட ஒரு பிரதமரை நான் 25 ஆண்டுகளில் பார்க்கவில்லை என்று மாற்றி கூறி சமாளித்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உண்மையை சொல்லுறவங்க தெய்வத்திற்கு சமம் என்று, ஆ.ராசாவை அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கிண்டலடித்து வருகின்றனர்

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?