திருச்சி சம்பவம் போல கோவையில் பயங்கரம்… பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை ; போலீசார் விசாரணை..!!!

Author: Babu Lakshmanan
28 November 2023, 1:24 pm

கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

நள்ளிரவில் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்ற அவர்கள், சிசிடிவி கேமிராக்களை இயங்க விடாதவாறு, ஜேமரை பயன்படுத்தியுள்ளனர்.

பின்னர், சாவுகாசமாக 100 சவரன் நகையை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வழக்கம் போல இன்று பணக்கு வந்த ஊழியர்கள் இதனைக் கண்டு போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!