டிக்கெட் எடுக்க சொன்ன நடந்துநருக்கு அரிவாள் வெட்டு… அரசு பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 11:34 am

டிக்கெட் எடுக்க சொன்ன நடந்துநருக்கு அரிவாள் வெட்டு… அரசு பேருந்தில் அதிர்ச்சி சம்பவம்!!!

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகரை நோக்கி நேற்று இரவு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பழைய வண்ணாரப்பேட்டை மூலகொத்தளம் சிக்னல் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது, இரு நபர்கள் திடீரென ஏறினர்.

அந்த நபர்களிடம், சூளைமேடு-ஆத்ரேயபுரம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த பேருந்து நடத்நதுரான ஜெகதீசன் (வயது 56) என்பவர் பயணச் சீட்டு எடுக்கும்படி கூறினார்.

அப்போது அவர்கள் இருவரும், எங்களை எப்படி பயணச்சீட்டு எடுக்க கூறலாம் என்று தகராறு செய்தனர். தகராறு முற்றவே அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஜெகதீசனை வெட்டினர்.

இதை பார்த்த பயணிகள் சத்தமிட்டு அலறினர். உடனே அந்த நபர்கள், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இறங்கி தப்பியோடினர். இச் சம்பவத்தில் காயம் அடைந்த ஜெகதீசன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?