இதுதான் போலீஸின் இலட்சணமா..? மீண்டும் மீண்டும் திமுகவை சீண்டும் காங்கிரஸ்.. கோபத்தின் உச்சத்தில் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 11:08 am

ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், வேண்டா வெறுப்பாக அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து வருவது நாளுக்கு நாள் வெட்ட வெளிச்சமாகி வருகிறது. பிற மாநில தேர்தல்களில் அடையும் தோல்வியனால் மவுசு குறைந்து வரும் காங்கிரசை எட்டா தூரத்திலேயே வைத்து பார்க்க திமுக பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது.

stalin-ks-alagiri-updatenews360

ஆனால், அரசியல் எதிர்காலம் கருதி, காங்கிரஸ் தலைவர்கள் பல்லை கடித்துக் கொண்டு திமுகவுடன் சுமூகமான உறவை தொடர்ந்து வருகின்றனர். இப்படியிருக்க, அண்மையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் விடுதலையை, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இது காங்கிரசுக்கு புகைச்சலை ஏற்படுத்தியது.

இதனை வெளிப்படையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள், திமுகவை மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்கி பேசி வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் பிரமுகராக அமெரிக்கை நாராயணன், திமுகவினருடன் நேரடியாக வார்த்தை போரில் இறங்கி தாக்கி பேசி வருகிறார்.

பேரறிவாளனை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டித் தழுவியதை கடுமையாக விமர்சித்து வரும் அவர், சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்றும்‌ வாரிய தற்காலிக பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது, யாரையோ கட்டிப்பிடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆதி திராவிடரை கட்டிப்பிடித்து கோரிக்கைகளை நிறைவேற்றாதது..? ஏன் என்றும், இவர்கள் திராவிடர்கள் இல்லையா..? என்று கேள்வி எழுப்பை திமுகவை வம்புக்கு இழுத்தார். இது திமுக கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை வைத்து மீண்டும் திமுக அரசை சீண்டியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்கை நாராயணன்.

தமிழக அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால், மற்றொரு கை காவல்துறை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதாவது, சென்னையில் கலாக்ஷேத்ரா 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அணைக்க தீயணைப்பு துறையினருக்கு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால், குறுகிய தெருக்களில் பக்கத்து தெருவினர் கார்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் வந்து சேர தாமதமாகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் ரஞ்சித் என்பவரை அணுகி, கார்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால், அவர் பணியில் இல்லை, யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் எனக் கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையினரை, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு சாம்பிராணி போடும் விதமாக, காவல்துறையினரின் செயல்பாடு சரியில்லை என்பதை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டிருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!