இந்த முறை விட மாட்டோம்… சென்னையில் போட்டியிட தொகுதியை கேட்கும் காங்கிரஸ் ; செக் வைக்கும் கேஎஸ் அழகிரி

Author: Babu Lakshmanan
30 January 2024, 4:55 pm

சென்னை ; காங்கிரஸ் குறித்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக, திமுக கூட்டணி மற்றும் பாஜகவும் தயாராகி வருகின்றன. திமுகவை பொறுத்தவரையில் அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட குறைவான தொகுதிகளை ஒதுக்கவே திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி வலுவிழந்து விடுவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரியிடம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா..? காங்கிரசுக்கு பெற்று தாருங்கள் என்று எங்களின் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகிறார்கள். சென்னையில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன்.

ஒரு தொகுதியில் ஒரே கட்சி மீண்டும் மீண்டும் போட்டியிட்டால் மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும், எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!