சமந்தா விவாகரத்து குறித்து பற்ற வைத்த அமைச்சர்… திடீர் பல்டி : பரபரப்பு பேட்டி!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2024, 11:50 am

நடிகை சமந்தா – நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம் என பற்ற வைத்த அமைச்சர் திடீர் பேக் அடித்துள்ளார்.

நடிகை சமந்தாவின் திருமண முறிவிற்கு தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே சி ஆர் மகன் கே டி ஆர் தான் காரணம் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கொண்டா சுரேகா கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்திலும் திரை துறையிலும் பலத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு கொண்டா சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார்.

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான கே டி ஆர்,அமைச்சர் சுரேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தன்னுடைய வக்கீல் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

மன்னிப்பு கேட்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுரேகா, கடந்த காலங்களில் டிடிஆர் என்னை சிறுமைப்படுத்தி பேசியதற்கு பதிலீடு கொடுக்க முடிவு செய்து அந்த நிகழ்ச்சியில் அப்படி பேசி விட்டேன்

அப்போது என்னுடைய பேச்சு ஒரு குடும்பத்தை முழு அளவில் காயப்படுத்தும் என்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை.

என்னுடைய அந்த பேச்சை நான் நிபந்தனை இல்லாமல் திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
ஆனால் என்னைப் பற்றிய பேச்சு பேசிக் பேச்சுக்களுக்கு கே.டி.ஆர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதுவரை அவரை விடமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?