3 நாள் காங்கிரஸ் மாநாடு ராஜஸ்தானில் இன்று தொடக்கம்… கட்சியை பலப்படுத்த தேவையான வியூகங்களை வகுக்கும் சோனியா…!!

Author: Babu Lakshmanan
13 May 2022, 9:04 am
Quick Share

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்தடுத்து பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் அடைந்த தோல்வியால் காங்கிரஸ் கட்சியும், அந்தக் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர். எனவே, கட்சியை புதுப்பித்து, நேர்மறையான பாதையில் பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

இந்த நிலையில், ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் நடக்கும் மாநாடு காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் இருந்து 430 நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். சுமார் 9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த மாநாடு நடக்கிறது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொதுத்துறை பங்குகள் விற்பனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ‘ஒரே குடும்பம், ஒரே டிக்கெட்’ என்ற வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தல் சீட் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

மாநாட்டில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொடக்க உரை ஆற்றுகிறார். 15-ந் தேதி, ராகுல்காந்தி நிறைவுரை ஆற்றுகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.

Views: - 438

1

0