துரை வைகோவுக்கு காங்கிரஸ் கட்சியினர் திடீர் எதிர்ப்பு.. நேருக்கு நேர் வாக்குவாதம் : கூட்டணிக்குள் புகைச்சல்?

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2024, 1:15 pm

நாங்களும் கூட்டணி கட்சி தான் நாங்களும் உங்களுக்கு ஓட்டு போட்டு இருக்கோம் எங்க கொடியை ஏன் நீங்க புறக்கணிக்கிறீங்க… காங்கிரஸ் நிர்வாகிகள் துரை வைகோ விடம் வாக்குவாதம்

தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக புதுக்கோட்டைக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினரை ஓர்ண்டு இழுத்த காங்கிரசார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரை வைகோ இன்று முதல் முதலாக புதுக்கோட்டைக்கு வருகை தந்தார் .

அவரை வரவேற்பதற்காக திமுக இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியின் கொடிகள் நடப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் கொடி மட்டும் நடப்படவில்லை

இதில் அதிருப்தி அடைந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஒதுங்கிய நின்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டைக்கு வருகை தந்த துரை வைகோவை திமுக கூட்டணி நிர்வாகிகள் புதுக்கோட்டை மியூசியம் அருகே வரவேற்றனர்.

திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த திமுக இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் சேர்ந்த நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் துரை வைகோவிற்கு சால்வை அணிவிக்கும் போது மா புதுக்கோட்டை மாநகராட்சி உறுப்பினர் ராஜா முகமது துரை வைகோவுடன் நாங்களும் கூட்டணி கட்சி தான் நாங்களும் உங்களுக்கு ஓட்டு அளித்துள்ளோம் ஆனால் எங்களுடைய கொடியை நீங்கள் புறக்கணித்து உள்ளீர்கள்

அந்த கொடியை உங்களுக்கு நியாபகப்படுத்துவதற்காக காங்கிரஸ் சின்னம் பொருத்திய சால்வையை உங்களுக்கு அணிவிக்கிறேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டால் இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?