மவோயிஸ்ட்டுகள் கூட திருந்திடுவாங்க… ஆனா, இந்த RSS-காரங்க திருந்த மாட்டாங்க ; செல்வப்பெருந்தகை!!

Author: Babu Lakshmanan
20 May 2024, 9:48 pm

மக்கள் மீது நம்பிக்கை இழந்து எப்படியாவது குறுக்கு வழியில் வென்றுவிடலாம் என்கின்ற வகையில் பாஜக துடித்துக் கொண்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- தென்மாநிலங்களில் பாஜக நோட்டாவுக்கு கீழ் தான் வெற்றி பெறும். பிரதமர் மோடி பிரச்சார மேடைகளில் பேசும்பொழுது மீண்டும் மீண்டும் சில மாநிலங்கள் எல்லாம் பெண்களுக்கெல்லாம் இலவச பேருந்து கொடுக்கிறார்கள். இதனால் மெட்ரோ ரயிலில் பயணிகள் யாரும் இல்லாமல் போகிறது என்று வருத்தப்பட்டு இருக்கிறார் ஒரு நாட்டின் பிரதமர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தவர் பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கின்ற தலைவர், யாராவது இப்படி பேசுவார்களா..? மெட்ரோ ரயிலின் வருமானத்தை பார்க்கிறார்களேத் தவிர, பெண்கள் முன்னேற்றத்தை பற்றி ஏன் பார்க்கவில்லை பிரதமர் நரேந்திர மோடி.

மேலும் படிக்க: போதையில் சொகுசு கார் ஏறி 2 பேர் உயிரிழப்பு… 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீனால் சர்ச்சை…!!!

வெறுப்பு அரசியலை தான் பாரதிய ஜனதா கட்சி பேசும். செய்ததையோ அல்லது செய்யப் போகிறதோ பாஜக தேர்தல் மேடைகளில் பேசாதே பேசாது. மாவோயிஷ்டுகள் கூட திருந்தி இப்பொழுது நல்ல வழியில் வருகிறார்கள். ஆனால் ஆர்எஸ்எஸ் எந்த காலத்திலும் திருந்தாது.

பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கின்ற வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான வேலைகளை செய்திருக்கிறார்கள். வாக்கு இயந்திரத்தில் எங்கு அழுத்தினாலும் அது பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்கு விழும் வகையில் இயந்திரங்கள் உள்ளது. எந்த அளவிற்கு ஒரு பாசிசம் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்பது இது ஒரு சாட்சி. மக்கள் மீது நம்பிக்கை இழந்து எப்படியாவது குறுக்கு வழியில் வென்றுவிடலாம் என்கின்ற வகையில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் இதுதான் பாசிச பாஜகவின் வேலைகள்.

நாளை ராஜீவ்காந்தி நினைவேந்தல் காலை ஏழு மணிக்கு சத்தியமூர்த்தி அனுசரிக்கப்படும். எட்டு மணிக்கு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். பூவிருந்த மல்லியில் இருந்து பேரணி அமைதி பேரணி நடைபெறும். ஒன்பது பத்து மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செய்யப்படும், எனக் கூறினார்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!