நிதி ஆயோக்கை புறக்கணிக்கும் காங்கிரஸ்; தமிழ்நாட்டை தொடர்ந்து அறிவிப்பு; 2024-25 பட்ஜெட் எதிரொலி

Author: Sudha
24 July 2024, 8:23 am

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நலன் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நித்தியமச்சர் நிர்மலா சீத்தாராமன். அதனால் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தை முற்றிலும் புறக்கணிக்கப் போகிறேன் என அறிவித்தார்.

மத்திய பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தமது எக்ஸ் பக்கத்தில், மத்திய பட்ஜெட் மிகவும் பேராபத்தானது. மத்திய அரசு கடைபிடிக்க வேண்டிய கூட்டாட்சிக்கு எதிரானது. இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ந் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணிப்பார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசாங்கத்தின் இந்தப் போக்கு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவித்துள்ளார்.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!