திருடர் குல திலகமே… அணிலுக்கு அடித்த ஜாக்பாட் : அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சனம் செய்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2022, 11:54 am
Bjp Poster - Updatenews360
Quick Share

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் ஏன் மின்சார வாரியம் ஒப்பந்தம் போட்டது என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, இந்த ஒப்பந்தத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அந்த நிறுவனத்துடன் 2019-ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும், அது அதிமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்டது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மேலும், இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டிவிட்டரில் கடும் மோதலில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்ட பாஜக சார்பாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அதில், “திருடர் குல திலகமே! ஊழலின் மறு உருவமே!, அணிலுக்கு அடித்த ஜாக்பாட், 5000 கோடி அதிபர் ஆக்கிய பிஜிஆர் நிறுவனம்” என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

அதோடு, தராசில் ஒருபுறம் ரொக்கம் குவிக்கப்பட்டது போலவும், மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. கரூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட பாஜக சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து அகற்றும்படி உத்தரவிட்டனர். இரவோடு விரைவாக இந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

Views: - 384

0

0