தாயின் உடலை தகனம் செய்த கையோடு.. தாய்நாட்டுக்கு முக்கியம் கொடுத்த மோடி : நெகிழ்ந்த அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2022, 11:51 am
Modi Annamalai - Updatenews360
Quick Share

பிரதமர் மோடியின் தாயார் ஹீரப்பெண் மோடி இன்று காலமானார்.
இன்று பிரதமர் மோடி காரில் தாயார் ஹீராபென் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட போது எப்போதும் பின்பற்றப்படும் ப்ரோடோகால் முறைகள் பின்பற்றப்படவில்லை. பொதுவாக பிரதமர் மோடி ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால், அவரை சுற்றி எஸ்பிஜி அதிகாரிகள் இருப்பார்கள். அதோடு closed contact பாதுகாப்பு குழு ஒன்றும் இருக்கும். இவர்கள் மட்டுமே மோடியை நெருங்க முடியும். மற்ற யாரும் மோடியை நெருங்க முடியாது. மோடியை சந்திக்கும் பெரிய தலைவர்கள் மட்டுமே பிரதமருக்கு அருகில் அனுமதிக்கப்படுவார்கள்.

இன்று முதலில் ஆம்புலன்சில் தனது தாயாரின் உடலனுடன் பிரதமர் மோடி தனியாகவே சென்றார். அதன்பின்தான் எஸ்பிஜி அதிகாரிகள் சில மீட்டர்களுக்கு பின் ஆம்புலன்ஸ் உள்ளே ஏறினார்கள். முதலில் பிரதமர் மோடி ஆம்புலன்சில் தனியாக செல்வதாகவே இருந்தது. எஸ்பிஜி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் பின் பக்கம் தொற்றிக்கொள்வதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி கடைசியில் அதிகாரிகள் உள்ளே அமர்ந்து கொண்டனர். இந்த பயணம் முழுக்க மோடி கைகூப்பி வணங்கியபடி காணப்பட்டார். தனது தாயாரை கை கூப்பி வணங்கியபடி மோடி இருந்தார்.

பிரதமர் மோடி தாயாரின் உடலுக்கு அதன்பின் தகன மேடையால் இறுதி மரியாதையை செய்தார். கடைசியாக உடலை சுற்றி வந்தார். அப்போது பிரதமர் மோடி உடைந்து கண்ணீர்விட்டார். இதையடுத்து ஹீராபென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இன்று பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இன்று பிரதமர் மோடி கொல்கத்தா செல்வதாக இருந்தது. வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க அவர் கொல்கத்தா செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் ஆன்லைன் வழியாக குஜராத்தில் இருந்தே இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து பிரதமரின் ட்விட்டர் பக்கத்தில் மேற்குவங்கம் மாநிலத்தில் தொடங்க இருக்கும் அரசு நிகழ்ச்சிகள் வழக்கம் போல தொடரும் என்றும், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

அதன் படி காபொலி காட்சி மூலம் பிரதமர் மோடி, நாடடின் நாட்டின் 7-வது வந்தே பாரத் ரெயில் சேவையை நாட்டு மக்களுக்கு அற்பணித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தேசபக்தியை கண்டு வியந்த அண்ணாமலை, முதலில் தேசம் பின்னர்தான் பர்ஷனல் என பதிவிட்டு, MY PM, MY PRIDE என பதிவிட்டுள்ளார்.

Views: - 312

0

0