கட்சியில் இருந்து வெளியேறிய சிடிஆர் நிர்மல் குமாருக்கு நெருக்கடி : ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை?

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 1:56 pm

தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவரான சிடிஆர் நிர்மல் குமார் நேற்று மதியம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கிறார்.

பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அதில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்‌. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான்‌ பாஜகவின்‌ அனைத்து பொறுப்புகளில்‌ இருந்தும்‌ ராஜினாமா செய்கிறேன்‌. பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும்‌ இல்லாமல்‌ உண்மையாக, நேர்மையாக கட்‌சியின் வளர்ச்சிக்காக என்னால்‌ முடிந்த வரை பணியாற்றினேன்‌ இன்று விடைபெறுகிறேன்.

என்‌ மீது நம்பிக்கை வைத்து என்னுடன்‌ பயணித்த உங்களிடம்‌ எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும்‌ கட்சியையும்‌ செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும்‌ சிந்திக்காது. சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும்‌ வேவு பார்த்து ஆனந்தம்‌ அடைவதை போன்ற அல்பத்தனம்‌ எதுவும்‌ இல்லை. அதையும்‌ தாண்டி தன்னை நம்பி இருக்கும்‌ தொண்டர்கள்‌, கட்சி மற்றும்‌ கமலாலயத்தின்‌ ஒவ்வொரு செங்களையும்‌ வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும்‌ தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும்‌ வேதனை அடைந்தது தான்‌ மிச்சம்‌ என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாக நிர்மல்குமார் மீது மாற்றுத்திறனாளிகள் அமைப்பை நடத்திவரும் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

மேலும், நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், ‘அன்பு சகோதரர் திரு. நிர்மல் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும்’ என்று வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!