காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு.. சினிமா பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் CM : EPS கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 11:54 am

காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு.. சினிமா பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கும் CM : EPS கண்டனம்!!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள X பதிவில், திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடும் கண்டனம்.

மேலும் படிக்க: தமிழக மகிளா காங்., தலைவர் திடீர் மாற்றம்… புதிய தலைவர் யார்? வெளியான அறிவிப்பு!

பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!