பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் கடன் அதிகரிப்பு.. நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிடிஆர் பதில்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2023, 2:31 pm
Ptr - Updatenews360
Quick Share

பாஜக ஆட்சிக்கு வந்த பின்தான் கடன் அதிகரிப்பு.. நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பிடிஆர் பதில்!!!

மத்திய அரசின் கடனை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசின் கடன் குறைவாக உள்ளது என தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ரூபாய் கணக்கில் கடனை ஒப்பிடக்கூடாது, உற்பத்தியில் எவ்வளவு கடன் என்பது முக்கியம். இதனால் கடனை பார்க்கும்போது அந்த மாநிலம் அல்லது நாட்டின் உற்பத்தியை பார்க்கவேண்டும்.

அதாவது, கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கணக்கிட வேண்டும். தமிழ்நாடு அரசின் கடன் GDP-யில் 27 சதவிகிதம்தான்.

ஆனால் மத்திய அரசின் கடன் GDP-யில் 60% இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இது அதிகமானது. தமிழகத்தில் 16, 17 சதவீதம் உற்பத்தியில் இருந்த கடனை 27 சதவிகிதம் வந்தது கடந்த 2014-21ல் இருந்த அதிமுக ஆட்சி.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடனை ஒரு சதவீதத்திற்குள்ளேவே வைத்துள்ளோம். மேலும், 9 ஆண்டுகளில் முதல் முறையாக வருவாய் பற்றாக்குறையும், மொத்த கடன் வாங்குறதையும் ரூபாய் கணக்கிலேயே குறைத்தது எங்கள் ஆட்சியில் தான். இதனை மேலும் கட்டுப்படுத்த படிப்படியாக செயல்பட்டு வருகிறோம் எனவும் கூறினார்.

Views: - 245

0

0