முதல்வர் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? அடியாட்கள் அவசியமா? பொங்கியெழுந்த நீதிபதிகள்..!!

Author: Sudha
1 August 2024, 3:37 pm

ஆம்ஆத்மி கட்சியின் எம்.பி.ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். ஸ்வாதி மாலிவாலுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மூலம், அவர் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

எனவே பிபவ் குமார் மீது, வன்கொடுமை, கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி பிபவ் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி ஐகோர்ட் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.

முதல்வரின் பங்களா தனியாருக்கு சொந்தமானதா? முதல்வர் அலுவலகத்திற்கு அடியாட்கள் தேவைப்படுகிறார்களா? தாக்குவதை நிறுத்தச் சொல்லி எம்.பி.மாலிவால் கூறியும், நீங்கள் தொடர்ந்து அடித்துள்ளீர்கள். என்ன நினைத்து ஒரு பெண்ணுக்கு இப்படிச் செய்தீர்கள்?அதிகாரம் உங்களிடம் இருப்பதாக தலைக்கனமா? நீங்கள் முன்னாள் செயலாளர் தான். பாதிக்கப்பட்ட பெண் அங்கு இருப்பதற்கு உரிமை இல்லை எனில், நிச்சயமாக உங்களுக்கும் அங்கு இருப்பதற்கான உரிமை இல்லை, என்று கோபமாகக் கூறினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!