விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய வணிகர்கள்… டெல்டா மாவட்டங்களில் இன்று பந்த்… கர்நாடக அரசுக்கு கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 12:17 pm

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணமேல்குடி மற்றும் அறந்தாங்கி ஒன்றியங்களில் காவிரி நீரின் கடைமடை பகுதியின் மூலம் சுமார் 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த விவசாயத்திற்கு தேவையான நீரானது காவேரி கல்லணை கோட்ட கால்வாய்கள் மூலமாக கிடைக்கப்பெற்று அதன் மூலம் கடைமடை பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஏரிகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு சம்பா மற்றும் குருவை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வருடத்திற்கான சம்பா சாகுபடி தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரானது, தங்களது விவசாயத்திற்கு வேண்டிய அளவு கிடைக்காததால், ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் இல்லாமல் வறண்டு காய்ந்து விட்டன. இதனால், விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால், தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பெற்று தர வேண்டிய திமுக அரசு சுமூக போக்கை கடைபிடித்து தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றது.

இதனை கண்டிக்கும் விதமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் உள்ள வர்த்தக சங்கத்தினர் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை ஆதரிக்கும் விதமாக அறந்தாங்கி அடுத்த நாகுடி,சுப்பிரமணியபுரம் பகுதி வர்த்தக சங்கத்தினர் இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?