மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம், சமூகநீதி நெருக்கடியில் உள்ளது : முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 8:46 am
CM -Updatenews360
Quick Share

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம், சமூகநீதி நெருக்கடியில் உள்ளது : முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!!

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் “கலைஞர் 100 – விகடனும் கலைஞரும்” என்ற பெயரில் நூல் வெளியிடப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் முதல் பிரதியை மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் மூத்த அமைச்சர், மூத்த பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அரசின் திட்டங்களை பாராட்டி எழுதுங்கள். அப்படி பாராட்டி எழுதும் போது தான், நீங்கள் வைக்கும் விமர்சனத்திற்கும் ஒரு மதிப்பு இருக்கும். அதனை விடுத்து விமர்சனங்களை மட்டும் எழுதினால் அந்த விமர்சனத்திற்கு மதிப்பு இருக்காது .

சரியானதை ஆதரிப்பதும், தவறானதை சுட்டிக் காட்டுவதும் தான் பத்திரிக்கையாளர் தர்மம். அதன்படி ஊடகங்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கோரிக்கைகள் எனக்காக அல்ல. மக்களுக்காக. இந்த சமுதாயத்திற்காக. தற்போது ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இதனை அரசியல் ரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம். அதேபோல் பத்திரிக்கையாளர்கள் வாயிலாக, இந்தியா ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாவில் கூட பத்திரிக்கையாளர் சுதந்திரத்தை பறிக்கும் பல அம்சங்கள் உள்ளன. இந்த மாதிரியான செயலை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

ஜனநாயகம் காக்கப்பட்டால் தான் பத்திரிக்கை துறை என ஒன்று இருப்பது எதிர்காலத்தில் தெரியும் இது என்னுடைய அக்கறை இதனை இங்கே சுட்டி கட்ட விரும்புகிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற விழாவில் உரையாற்றினார்.

Views: - 90

0

0