தேர்தலுக்கு முன்பு என்ன சொன்னீங்க… எல்லாம் மறந்து போச்சா…? திமுகவுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 11:14 am

கோவை ; மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் 1000 ரூபாய் என்பது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:- நூலகம் திறப்பது நல்ல விஷயம். அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான். மகளிர் உரிமை திட்டத்தைப் பொறுத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்க கூடிய விஷயம். தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே, வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு. நான் தற்பொழுது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜைக்காக வந்துள்ளேன்.

அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25ம் நடைபெற உள்ளது. கேப்டன்(விஜயகாந்த்) நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்த செயற்குழு. பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். அதனை அடுத்து தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் கட்சியின் வளர்ச்சி. அதற்குப் பிறகு தேர்தலுக்கு முன்பு கூட்டணியா..? இல்லையா என்பதை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார். மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள். யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள். என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும், அந்த கட்சிகளுக்குள்ளேயே பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. எனவே, இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம், என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!