சொல்றது ஒன்னு… செய்யறது ஒன்னு… நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ; பிரேமலதா விஜயகாந்த் கணிப்பு..!!

Author: Babu Lakshmanan
20 October 2023, 10:44 am

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசு நல்லது செய்ததோ, அந்த கூட்டணியில் தான் தேமுதிக இருக்கும் என்று தேமுகதி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டை கருவேப்பிலையான் ரயில்வே கேட்டு பகுதியில் தேமுதிக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தேமுதிக பொருளாளர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஆன்மீக குருவாக விளங்கிய பங்காரு அடிகளார் மறைவு என்பது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நாம் சனாதனம் குறித்து பேசி வருகிறோம். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே சனாதனத்தை நிரூபித்தவர் பங்காரு அடிகளார். பெண்கள் கருவறை வரச் சென்று பூஜை செய்யலாம் என்று அப்போது அறிவித்து, அதை நடைமுறையும் படுத்தியவர் பங்காரு அடிகளார்.

திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக செய்து வருகிறது. குறிப்பாக, மகளிர் உரிமை தொகை விஷயத்தில் தேர்தலுக்கு முன்பாக ஒரு நிலைப்பாட்டையும், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு, தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறியும் உள்ளது. இதனால், பல்லாயிரம் பெண்களுக்கு உரிமை தொகை கிடைக்காமல் உள்ளது. அரசு பெண்கள் தகுதி என்ன என்பது நிர்ணயம் செய்துள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லை.

மகளிர் உரிமைத்தொகை விவகாரம் திமுகவிற்கு பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும். தற்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது கிடையாது. தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளது என்பது குறித்த நிலைபாடு பற்றி விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தெளிவு இல்லை.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நான்கு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்னமும் அமைச்சராக அவரை தொடர செய்வது திமுகவிற்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் செந்தில் பாலாஜிக்கு எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளார் என்பதை காட்டுகிறது.

போதை இல்லாத தமிழகம் என்று முதல்வர் கூறிவரும் நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும், டாஸ்மார்க் கடைகளை மூடுவதற்கும், முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படிப்படியாகத்தான் டாஸ்மார்கள் மூட முடியும் என்பது உண்மைதான். இருந்தாலும் பூரண மதுவிலக்கு நோக்கி தமிழகம் செல்ல வேண்டும். தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில், விற்பனை இலக்கு விரைவில் நிர்ணயம் செய்யப்பட்டு அது 100 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும்.

இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைவருமே தற்போது மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடு உள்ளது.

அனைத்தும் இலவசம் என்று கூறும் அரசு, கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்க வேண்டும், இதை அழிப்பதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசு நல்லது செய்ததோ, அந்த கூட்டணியில் தான் தேமுதிக இருக்கும். இதுவரை தமிழகத்திற்கு யாரும் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை, எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!