TR பாலு அப்படி என்ன பண்ணீட்டாரு… ஜப்பானில் இருந்து வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகரின் மகன்… புது வீட்டுக்கு டிரைனேஜ் கனக்சன் தர மறுப்பதாக புகார்..!!!

Author: Babu Lakshmanan
24 April 2024, 12:07 pm

டிஆர் பாலு குறித்து மகன் வீடியோ வெளியிட்ட திமுக நிர்வாகியை உள்ளூர் திமுகவினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் 2வது வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் என்பவரின் மகன் சிவராமகிருஷ்ணன், ஜப்பானில் ஹோண்டா கார் தொழிற்சாலையில் ரிசர்ச் டெவலப்பராக பணியாற்றி வருகிறார். அங்கிருந்தபடியே, ஜப்பான் தமிழ் பிரதர்ஸ் எனும் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டிஆர் பாலுவை விமர்சித்து வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் போட்டுள்ளார் சிவராமகிருஷ்ணன்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சிவராமகிருஷ்ணனின் தந்தையும், திமுக நிர்வாகியுமான ராமலிங்கத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவி சாந்தியின் கணவரிடம் அழைப்பு வந்துள்ளது. அப்போது, இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பிய அவர், எங்க ஏரியாவில் தான் புதுதாக வீடு கட்டுகிறாய். மின்சாரம், குடிநீர் மற்றும் டிரைனேஜ் இணைப்புகளை நீ எப்படி வாங்குகிறாய்..? என்று பார்க்கலாம் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி செயலாளர் சதீஷ், ராமலிங்கத்தை தான் சந்தித்ததே கிடையாது என்றும், அவருக்கு மிரட்டல் விடுத்த ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!