விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திமுக அரசு.. ஆடு மாட்டிக்கிச்சு : செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2024, 1:25 pm

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கள்ளர் சீரமைப்பு துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது.

தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு துறையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் பாதிக்கப்படுவர்கள், கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகள் மூடப்படவுள்ளது.

விமர்சனத்திற்கு ஒரு எல்லை வேண்டும் என சொன்ன அண்ணாமலை திமுகவினரை மிக கேவலமாக பேசி உள்ளார்.

கைப்பேசியில் வந்த அழைப்பின் பேரில் அண்ணாமலை கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ஒடோடி சென்று பங்கேற்றுள்ளார்.

திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலை தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார், ஆடு சரியாக மாட்டிக் கொண்டது,

பயத்தின் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்வர் விழா நடத்தி உள்ளார், அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளுக்கு பயந்து மத்திய அரசை அழைத்து விழா நடத்தி உள்ளனர்.

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என மீண்டும் நிரூபணம் செய்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக பேசி வருகிறார்.

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை, ஒரு இளைஞர் அரசியலுக்கு வருவதை திமுக அரசு தடுக்கிறது. தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என நினைக்கிறது.

த.வெ.க நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் திமுக அரசு அனுமதி மறுக்கிறார்கள்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!