திமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு… நிர்வாக வசதிக்காக திமுக மாவட்டங்கள் மாற்றியமைப்பு : வெளியான முக்கிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 4:12 pm
DMK Announcement - Updatenews360
Quick Share

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. செப்.22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அதன்படி மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்களின் சட்டமன்றத் தொகுதிகள் மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக 15வது பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்ற பின்வரும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத் தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் வகுப்பினராகவும், ஒருவர் மகளிராகவும் இருத்தல் வேண்டும்), பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் (மகளிர் ஒருவர் கட்டாயமாக இருத்தல் வேண்டும்) ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து கீழே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000 கட்டணமாக தலைமைக் கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 259

0

0