திமுக எம்பி கெஜத்ரட்சகனுக்கு ₹908 கோடி அபராதம்.. அமலாக்கத்துறை அதிரடி : சிங்கப்பூரால் வந்த சிக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 6:03 pm

அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன். இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார்.

அதன்பின், இந்தப் பங்குகளை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார்.இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது.

அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கான உத்தரவு கடந்த 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!