திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.. விஜய்யின் அரசியல் குறித்து ஆருடம் சொல்ல முடியாது ; திமுக எம்பி கனிமொழி கருத்து…!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 10:42 am

திமுகவுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.. விஜய்யின் அரசியல் குறித்து ஆருடம் சொல்ல முடியாது ; திமுக எம்பி கனிமொழி கருத்து…!!

சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு மக்களுக்கு அது யாராக இருந்தாலும் திமுக அரசு எதிராக செயல்பட்டதில்லை. பெரும்பான்மை இந்து மக்கள், ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்காக உழைக்க கூடிய இயக்கம் திமுக.

பெரும்பான்மை என பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்ய கூடியவர்கள் தான் அதற்கு எதிரானவர்கள். ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடிய அரசியலை ஒதுக்க வேண்டும் என இதை தொடர்ந்து சொல்லி கொண்டு வருகிறோம்.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய்யிக்கும் அரசியலுக்கு வர எல்லா உரிமையும் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. முதலமைச்சரின் நல்லாட்சிக்கான பரிசாக மக்கள் வாக்களிப்பார்கள். யாருடைய அரசியல் எப்படி இருக்கும் என ஆரூடம் சொல்லும் நிலையில் நான் இல்லை.

அரசியல் களத்திற்கு வர வேண்டும் என முடிவு செய்து விட்டு வந்து உள்ளார். அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என கருத்து சொல்ல முடியாது, எனக் கூறினார்.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!