திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் ‘உயர்ரக ஐபோன்’ திருட்டு? டெல்லி திமுக விழாவில் கைவரிசை : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 7:46 pm
Tamizhachi Cell Phone Theft - Updatenews360
Quick Share

டெல்லி : திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனிடம் இருந்து உயர்ரக செல்போன் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளில் 7 எம்பிக்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி திமுகவுக்கு டெல்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நிலம் வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கு திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின.

Image

சுமார் 8 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களுடன் இந்த அலுவலகம் கட்டப்பட்டு, நுழைவு வாயிலில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டன.

Image

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு திமுக அலுவலகத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Image

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திறப்பு விழாவில் பங்கேற்ற போது கூட்டத்தில் இருந்த மர்மநபர்கள் அவரது கைப்பையில் (Hand Bag)வைத்திருந்த விலை உயர்ந்த ஐபோனை எடுத்து சென்றார்களா அல்லது மாயமானதா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.

இதையடுத்து செல்போன் மாயமானதாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 572

0

0