எங்களை சீண்டிப் பார்க்காதீங்க… அப்பறம் பழைய திமுகவை பார்க்க வேண்டி இருக்கும் ; ஆளுநருக்கு ஆர்எஸ் பாரதி வார்னிங்..!!

Author: Babu Lakshmanan
23 August 2023, 9:12 am

சென்னை ; முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிப்பதை ஆளுநர் எதிர்ப்பது புறக்கணிப்பது கண்டனத்திற்கு உரியது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு ஆளுநர் அவர் வேலையை தவிர்த்து பிற வேலையை செய்து வருகிறார். தமிழ்நாடு டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவிக்கு தமிழக அரசின் சார்பாக சைலேந்திரபாபு அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டு அதற்கு அனுமதி அளிப்பதுதான் தான்  முறையானது. ஆனால் திட்டமிட்டு ஆளுநர் மறுப்பதற்குரிய உள்நோக்கம் என்ன என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்.

இதுவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக எந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமூகத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பதற்காக, ஏற்கனவே நியமிக்கப்பட்ட சமுதாயத்தை தவிர எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வரவில்லையோ, அவர்களில் ஒருவராகவும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவை tnpsc தலைவராக  நியமிப்பதை ஆளுநர் எதிர்ப்பது புறக்கணிப்பது கண்டனத்திற்கு உரியது. அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இவ்வாறு செய்து வருகிறார்.

மேலும், சென்னை என்ற பெயரை மாற்றி 30 வருடம் ஆகிறது. ஆனால், அதன் பெயரை மெட்ராஸ் என குறிப்பிடுகிறார் என்றால், தமிழ்நாட்டை ஆளுநர் சீண்டி பார்க்கிறார்.

தமிழகத்தின் பாடநூல்களை பல்கலைக்கழகங்களில் படிக்கக்கூடாது என்ற உத்தரவையும் பிறப்பிக்க போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. இது போன்ற செய்திகளை தமிழக மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள், இதற்கான பல விளைவை ஆளுநர் பெறுவார்.

டிஜிபியை திமுக சார்பாக நியமிக்கவில்லை. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதின் அடிப்படையில் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார். காவல்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் தான் அவரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

சாதி என்று நான் குறிப்பிடவில்லை, இதுவரை எந்த சமுதாயத்தில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லையோ, அவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு பரிந்துரைக்கப்பட்டார். உதாரணத்திற்காக  நாடார் சமூகத்திலிருந்து ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் அவரை நியமிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது.

நடிகர்கள் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. நாம் ஏதாவது பேசினால் அதனை திருத்து கூறுகிறார்கள். ஆளுநர் இவ்வாறு எல்லாம் பேசுவது பழைய நிகழ்ச்சிகளை சொல்லுவதற்கு தூண்டுகிறது போல் உள்ளது.
இன்னும் ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வரும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும், என கூறினார்.

எங்களுக்கென்று (திமுக) ஒரு வழிமுறை இருக்கிறது. எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலை வரும் என ஆளுநர் ஆர் என் ரவிக்கு ஆர்எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்தார்.

புரட்சி தமிழர் என எடப்பாடி பழனிசாமிக்கு  பட்டம் கொடுத்துள்ளார்கள். எம்ஜிஆர் ஒரு மலையாளி, ஜெயலலிதா ஒரு கன்னடத்தவர் என எம்ஜிஆர் ஜெயலலிதாவை காட்டிக் கொடுப்பது போல் உள்ளது என பதிலளித்தார். மேலும், நீட் வந்ததற்கு காரணமே எடப்பாடி தான். நீட் நடத்துவதற்கு  எடப்பாடி தான் முக்கிய காரணம், எனக் கூறினார்.

ஆளுநரை விமர்சித்ததற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறட்டும் என கூறியது குறித்து செய்தியாளர் எழுப்பி கேள்விக்கு,
பக்ரீத்துக்கு ஆடு தன்னை தான் பிரியாணி என்று சொல்வது ஆக, நாம் எதை கூறினாலும் அவரே எடுத்துக் கொள்வார். அவரைப் பற்றி பேச விரும்பவில்லை, என்று பதிலளித்துள்ளார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!