கூட்டணிக்குள் மோதலை ஏற்படுத்துவதா..? திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் ; துரைமுருகன் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
21 October 2022, 10:55 am

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகக் கூறி, திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

dmk ks radhakrishnan - updatenews360

திமுக செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு காரணம், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்டதால்தான் என்கின்றனர்.

அண்மையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நேரு குடும்பத்தினரான ராகுல் காந்தி, சோனியா காந்தி போட்டியிட விரும்பவில்லை. இதனால், சசிதரூர் – மல்லிகார்ஜுன கார்கே இடையே மோதல் ஏற்பட்டது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

congress - updatenews360

இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராகி உள்ளார். இதன்மூலம், தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும், கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே பற்றியும் திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியாக உள்ள நிலையில், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் இப்படி பேசியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

duraimurugan dmk - updatenews360

இந்த நிலையில்தான் திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!