தேர்தல் பரப்புரையை தொடங்கியது திமுக.. பாசிசம் வீழும்.. INDIA வெல்லும் : முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 7:26 pm

தேர்தல் பரப்புரையை தொடங்கியது திமுக.. பாசிசம் வீழும்.. INDIA வெல்லும் : முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை!

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். #INDIA வெல்லும்” எனப் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் தொடங்கி 3 நாட்களுக்கு திமுக தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது. ”உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்” என்ற தலைப்பில் மக்களவை தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்படுகின்றன, இது தொடர்பான வீடியோ காட்சியையும் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?