மருத்துவ டிப்ஸால் எழுந்த சர்ச்சை… சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு அடுத்தடுத்து சிக்கல் ; 15 நாட்கள் கெடு..!!

Author: Babu Lakshmanan
9 January 2023, 9:38 am

இணையதளத்தில் தவறான தகவல்களை வீடியோ மூலம் பரப்புவதாக சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜக சிறுபான்மையின அணி தலைவரான டெய்சி சரணின் மகள் தான் ஷர்மிகா சரண். இவர் டெய்சி ஹாஸ்பிடல் என்ற ஓரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

ஒரு மருத்துவ குறிப்பு என்ற பெயரில் வரும் 100 ஆண்டுகளில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அறிய வகை மருத்துவத்தை அவருடைய பார்வையாளர்களுக்கு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், முரட்டு வைத்தியம், மலையடி சாத்திரம், ஹோமியோபதி, அம்பிகாபதி, அமராவதி என எல்லாவற்றிற்கும் வைத்தியம் பார்க்கும் இவரின் திறமைக்கு எல்லையே கிடையாது.

அவர் சொல்வதெல்லாம் சேர்த்து புத்தக அருங்கட்சியாகமே ஆரம்பிக்கலாம். அந்த அளவிற்கும் உருட்டாக உருட்டி வருகிறார். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் சரிமாணமாகாது என்றும், மாட்டை சாப்பிட்டால் நம்முடைய உடலில் பிரச்சனை ஏற்படும் என்றும் எல்லாம் கூறிய வீடியோ இணையதளத்தை வைரலாகியது.

அதே போல, 10 நாட்கள் பட்டினி இருந்து குறைக்கிற உடல் எடை 11வது நாள் ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் 3 ஜாமுன் எடை வந்துவிடும் என்றும், குழந்தை பெத்துகொள்ள வேண்டுமென்றால் புருஷன் நல்லவனா இருந்தா போதும் என்றும், மற்றவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார் என்றும் பேசியது எல்லாம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், ஷர்மிகா அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக
தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இணையதளத்தில் தவறான தகவல்களை வீடியோ மூலம் பரப்புவதாக சித்த மருத்துவர் ஷர்மிகா மீது இந்திய மருத்துவ இயக்குநரகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?