5 வது மாடியில் இருந்து சிறுமியின் மேல் விழுந்த நாய்: நிலை தடுமாறி விழுந்து பலியான 3 வயது சிறுமி.. கதறித் துடித்த பெற்றோர்….!!

Author: Sudha
8 August 2024, 8:56 am

மஹாராஷ்டிரா, மும்பையில் உள்ள மும்ப்ரா பகுதியில் சாலையில் தாயுடன் சென்று கொண்டிருந்த. 3 வயது சிறுமியின் தலையில் 5வது மாடியில் இருந்து திடீரென நாய் ஒன்று விழுந்தது. இதில் 3 வயது சிறுமி மயக்கம் அடைந்தார். தாய், கதறியபடி சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதும், தாய் அதிர்ச்சி அடைந்தார். சிறுமியின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சிறுமி மீது நாய் விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும், நாய் குதித்ததா அல்லது சாலையில் வீசப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நாயை வளர்க்க உரிமையாளருக்கு அனுமதி இருந்ததா அல்லது அவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவத்திற்கு வழிவகுத்ததா என்பதை அறிய “தானே” நகர மாநகராட்சியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிறுமி மீது விழுந்த நாய், அருகே இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!