எங்களுக்கு சோறு போடுங்க.. ஆனா தலையில தூக்கி வைச்சு கொண்டாடதீங்க.. நாங்க ஒண்ணும் பெரியாரோ, அம்பேத்கரோ இல்ல : நடிகர் சத்யராஜ் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 3:11 pm
Sathyaraj - Updatenews360
Quick Share

நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் ஈரோட்டில் தொடங்கப்பட்டது.
இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தற்கொலைகள் குறித்து சத்தியராஜிடம் கேள்வி எழுப்பிய போது, நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள் என்றார்.

சமூகத்தில் மிகப்பெரிய தவறே நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதுதான் என்ற அவர், நடிகர்களுக்கு சாப்பாடு போடுங்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 219

1

0