செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு போட்ட ஸ்கெட்ச்… ED கன்ட்ரோலில் கரூர் வீடு ; முக்கிய இடத்தில் கைவைத்த அதிகாரிகள்..!!

Author: Babu Lakshmanan
8 February 2024, 2:10 pm

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யும் நடவடிக்கையாக, கரூரில் உள்ள அவரது பெற்றோரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, இந்த வீட்டிற்கு பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் குறித்து அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அசோக்குமார் எங்கே..? என்று துருவி துருவி கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அதிகாரி ஒருவர் அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!