மீண்டும் அரசியலில் இறங்குகிறாரா? ஓபிஎஸ்சை தனியாக சந்தித்து பேசிய ஜெ. தீபா.. வெளியான பின்னணி காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2023, 11:55 am

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால், அதிமுக சார்பில் யார் போட்டியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் நேற்று இருவரும் தங்களின் வேட்பாளரை அறிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சென்று அவரை திடீரென சந்தித்தார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்கள் அணி சார்பாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், ஜெ.தீபா ஓபிஎஸ்ஸை சந்தித்ததால் அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபா;- குடும்ப விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பிதழ் வழங்க வந்ததாக கூறினார். அரசியல் சார்ந்த சந்திப்பு இல்லை என்று குறிப்பிட்ட அவர் மீண்டும் அரசியலுக்கு வருவேனா என்பது கடவுள் கையில் இருப்பதாக தெரிவித்தார்.

சசிகலா மீது தாம் ஏற்கனவே கூறிய குற்றச்சாட்டுகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார். போஸ் இல்லம் புனரமைக்கப்பட்ட பிறகு அங்கு குடியேறுவேன் என்று ஜெ.தீபா கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?